குடும்பத்தில் தந்தை என்ற மிக சக்தி வாய்ந்த ஸ்தானத்தில் ஒரு அப்பன் பேரன்மையும் விதைக்க முடியும். பெருந் துன்பத்தையும் திணிக்க முடியும். சுய நலமிக்க தந்தையால் ஒரு குடும்பம் சந்திக்கும் இன்னல்களை அணுவணுவாக காட்சிப்படுத்தி, குடும்ப வன்முறை களத்தை தத்ரூபமாக படம் பிடித்துள்ளனர்! சோனி ஓடிடியில் வெளியாகியிருக்கும் அப்பன் என்னும் மலையாள சினிமா கொடூரமான, சுயநலமான தந்தை கதாபாத்திரத்தின் மூலம், வாழ்வின் இருத்தலை கேள்விக்குள்ளாக்குகிறது. வழக்கமாக, செண்டிமெண்டல் பாத்திரமாக மட்டுமே வடிவமைக்கப்படும் அப்பா பாத்திரத்தை, இப்படியும் ஒரு மனிதனா? என்று நினைக்கும் அளவுக்கு சுயநலமும், ...