வரலாறு காணாத மணல் கொள்ளைகள் முழ்வீச்சில் அரங்கேறி வருகின்றன! நீர்வளத் துறையின் அமைச்சரே மணல் வளத்தை சூறையாடுவதால் மழை, வெள்ள காலங்களில்  பாதிப்பு அதிகமாகிறது. மலையளவு கொள்ளையடித்து, மடுவளவு அரசு வருமானத்தை காட்டும் துரைமுருகனை மத்திய பாஜக ஏன் விட்டுவைத்துள்ளது? துாத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, சூசைபாண்டியாபுரத்தைச் சேர்ந்த கோவில்பத்து வி.ஏ.ஓ.,வான  லுார்து பிரான்சிஸ் முறப்பநாடு பகுதியில், தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளையை தடுக்க முயற்சித்ததில் மணல் மாபியாக்கள் லுார்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு சென்றனர்! திண்டுக்கல் மாவட்டம் பழனி ...