நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் காவு வாங்கப்பட்ட போதும், ஆயிரக்கணக்கில் குடியிருப்புகள் எரிக்கப்பட்ட போதும் மணிப்பூர் இந்தியாவில் இருப்பதே மோடிக்கு தெரியவில்லை. தற்போது அங்கு சென்று அவர் சாதித்தது என்ன? மோடி, அமித்ஷா, பைரோன் சிங் ஆகியோர்களால் வித்திடப்பட்ட கலவரத்தின் விளைவை பார்க்கவோ இந்த விசிட்: கலவரம் வெடித்து 28 மாதங்கள் கடந்து மணிப்பூர் சென்றார் மோடி. மணிப்பூர்  சென்ற மோடி அங்கு “ சில மணி நேரங்களை” செலவிட்டு ரோடு ஷோ நடத்தி விட்டு, தில்லி திரும்பி இருக்கிறார். சூரசந்பூரில் ரோடு ஷோ நடத்திய ...

”மணிப்பூர் கலவரத்தை உருவாக்கி, நான் தான் குக்கி பழங்குடிகளின் குடியிருப்புகளில் குண்டு வீசச் சொன்னேன். ..”என பெருமையாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பேசிய ஆடியோ டேப் அம்பலமாகியுள்ளது. ஒரு முதலமைச்சர் இப்படியெல்லாம் செய்ய முடியுமா? ஆடியோ டேப் முழு விவரங்களும், அதன் பின்னணியும்; கடந்த ஆண்டு (2023) மே மாதம் வெடித்துக் கிளம்பிய மணிப்பூர் வகுப்புக் கலவரம் இந்திய நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. மணிப்பூர் பள்ளத்தாக்குகளை உறைவிடமாக கொண்ட மெய்தீ இன மக்களுக்கும் , மலைப்பகுதிகளில் வாழ்ந்துவரும் குக்கி-ஜோ இன ...