வேலியே பயிரை மேய்ந்த கதையாக முதலமைச்சரே மணிப்பூரில் கலவரத்தை தூண்டிவிட்டு, ஒரு தரப்பை ஆதரித்து, கிறிஸ்த்துவ பழங்குடிகளான குக்கி இன மக்களை கூண்டோடு கருவறுக்க காய் நகர்த்தியது துல்லியமாக அம்பலப்பட்ட  நிலையில், பாஜக தலைமை பிரேன் சிங்கை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா…? அறுநூற்று ஐம்பது நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் சமூகத்தின் இரு பெரும்பிரிவுகளான மெய்தீ மக்களுக்கும் குக்கி இன மக்களுக்கும் இன மோதலும் வன்முறையும் வெடித்து உச்சத்தை தொட்ட பொழுது , பதவியிலிருந்து விலகாத முதல்வர் என். பிரேந்திர சிங்  அமீத் ...