எத்தனை வகையான விமர்சன அம்புகள், அவதூறுகளை வீசினாலும் அவற்றையெல்லாம் தாண்டி, இந்தப் படம் மக்கள் மத்தியில் சென்று மகுடம் சூட்டிக் கொண்டு விட்டது. அறிவு ஜீவிகள் சிலர் பேசுகிற பேச்செல்லாம் காற்றில் கலந்து போய் விடும். அணுவணுவாக ரசித்து, கொண்டாடி மகிழத் தான் எத்தனை அம்சங்கள் இருக்கின்றன..! அமரர் கல்கி இலக்கிய உலகத்தில் கொடி கட்டிப் பறந்தவர். இந்திய விடுதலைப் போராட்ட கால தேசபக்தர். அவர் சாதி, மத,இன, மொழி, வேறுபாடுகளைத் தாண்டி வாழ்ந்த தேசியவாதி. அவர் தமிழர்களைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்றோ, தமிழ் ...
சோழ மண்ணின் வரலாற்று அடையாளங்களே இல்லாத காட்சிப்படுத்தல்கள்!, சத்தியம் செய்து சொன்னாலும் கூட தமிழச்சிகள் என நம்ப முடியாத நடிகைகள்! நாளும், பொழுதும் போர்களோடும், சூழ்ச்சிகளோடுமாக மன்னர்கள் வாழ்ந்ததாக காட்டும் அறியாமை! பிரம்மாண்டம் காட்டிடும் பித்தலாட்டச் சினிமா! உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தப் படம் பற்றி எழுதுவதையே தவிர்த்து விடலாம் என்று தான் படம் பார்த்து முடித்ததும் தோன்றியது! அந்த அளவுக்கு படத்தில் வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம், வன்முறைகள், ரத்தம் போன்றவை தூக்கலாக இருந்தது ஒரு காரணம்! ‘பண்டைய மன்னராட்சி காலம் என்றாலே அன்று ...