20 ஆம் நூற்றாண்டு தமிழ் எழுத்தாளர்களில் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர் ஜெயகாந்தன்! அவரது சிறுகதைகளும், நாவல்களும் தமிழ் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியவை! அவரது படைப்புகள் பலரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை உருவாக்கியவை! ஜெயகாந்தன் படைப்புகள் பல இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன! ஆங்கில மொழியிலும், ருஷ்ய மொழியிலும் கூட மொழி பெயர்க்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளன! இந்திய அரசின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதை பெற்றவர் ஜெயகாந்தன். சாகித்திய அகாதமி விருதும் பெற்றவர்.ரஷ்ய அரசின் மிக உயர்ந்த இலக்கிய விருதும் ...