கொரோனாவுக்குப் பிறகு பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீர் கழிப்பதில் சிக்கல், சொட்டு மூத்திரம், முக்கிக்கொண்டு மலம் கழித்தல், தூக்கமின்மை, வயிறு மந்தம், வயிற்றுவலி என ஒவ்வொருவிதமான பிரச்சினைகள். மருத்துவர்களிடம் தீர்வு கேட்டால் தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகிறது. முன்பைப் போல் உடம்பு ஒத்துழைப்பதில்லை என்று அங்கலாய்ப்பவர்கள் பலரையே பார்க்க முடிகிறது. என்ன சாப்பிட்டாலும் உடல்நிலையில் முன்னேற்றம் தெரியவில்லை என்கிறார்கள். வயது வித்தியாசமில்லாமல் இளம் வயதினர் கூட நோய் தாக்குதலுக்குள்ளாகி அவர்கள் படும் பாடு சொல்லி மாளவில்லை. `எத்தனையோ டாக்டர்களை பார்த்துவிட்டேன், என்னென்னவோ டானிக், மாத்திரையெல்லாம் ...