15 மாத தொடர் விசாரணைகள்! ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரெய்டுகள், எட்டு மாதத்திற்கும் மேலான சிறை.. ஆயினும் இது வரை குற்றத்திற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் காட்ட முடியவில்லை. நேர்மையான மக்களாட்சியை நடத்தும் ஆம் ஆத்மியின் இமேஜை சிதைக்க, பாஜக அரசு செய்யும் சதித் திட்டங்கள் மலைக்க வைக்கின்றன..! டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து நல்லாட்சி தந்து கொண்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி! பாஜக எவ்வளவோ அதிகார துஷ்பிரயோகங்கள் செய்தும், பலமாக முட்டி மோதியும் கூட மக்களிடையே ஆம் ஆத்மிக்கு ...