சட்டீஸ்கரில் தற்போது ஆட்சியிலுள்ள காங்கிரஸ் அரசை மதிப்பீடு செய்யும் போது பெயில் மார்க்கிற்கு வாய்ப்பில்லை! மத்திய பிரதேசத்தில் சென்ற முறையே காங்கிரஸ் வென்ற போதிலும், ஆள்தூக்கி அரசியலில் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த பாஜகவை மக்கள் மன்னிக்க தயாரில்லை..இதோ ஒரு அலசல்; நவம்பரில் நடைபெற இருக்கும் ஐந்து மாநில தேர்தல்கள் பல்வேறு அரசியல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 2024ல் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன்னால் இந்திய மக்களின் குறிப்பாக இந்தி மொழி பேசும் வட மாநில மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தலாம். ...