மனிதி செல்வி ஒரு களச் செயற்பாட்டாளர். கார்ல் மார்க்ஸ் சிலை அமைப்பு, பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்றது, தனித்து குழந்தைகளை வளர்க்கும் பெண்களின் பிரச்சினை, தலித் பெண்கள் மாநாடு, போரில்லா உலகம், 33 % இட ஒதுக்கீட்டை நிர்பந்தித்து முதலமைச்சர் விஜய்யை சந்தித்த பெண்கள் குழு.. என பரபரப்பாக இயங்கும் மனிதி செல்வியிடம் பீட்டர் துரைராஜின் நேர்காணல்; பொது வாழ்கைக்காக ஆசிரியர் பணியை துறந்த மனிதி செல்வி, இந்த நேர்காணலில் பெண்கள் எதிர் கொள்ளும் பலவிதமான பிரச்சினைகளை அலசுகிறார். தனித்து வாழும் பெண்கள் சந்திக்கும் ...
















