கண்ணீர் துளி வடிவில் அமைந்துள்ள இலங்கை தீவு எலும்பு கூடுகளால் நிரம்பிய தீவாக காணப்படுகிறது. இலங்கையில் நடைபெற்றுள்ள மாபெரும் மனித உரிமை மீறல்களுக்கான சாட்சியங்களாக இவை திகழ்கின்றன. இந்த புதை குழிகளுக்கு காரணமானவர்கள் தொடர்பிலான விசாரணைகள் நடக்குமா? அல்லது அந்த உண்மைகளும் புதைக்கபடுமா? இந்த இந்து மகா சமூத்திரத்தின் முத்துக்குள் புதைகுழிகள் நிரம்பியிருக்கின்றன. அழகிய கடற்கரைகள், பசுமையான தேயிலை தோட்டங்கள், மலைகள், நதிகள், என அழகான பக்கங்கள் ஒரு புறமிருக்க, மறுபுறம் புதைகுழிகளாலும் நிரம்பியிருக்கிறது. கண்ணீர் துளி வடிவில் உள்ள இத்தீவில் கண்ணீருடன் வாழும் ...













