பேராசைகளற்று வாழ்ந்த இவரை இந்தியாவின் ஆகச் சிறந்த உயர்பதவிகள் தேடி வந்தன. இந்திய பொருளாதாரத்தின் திசையை மாற்றுவதில் சுமார் 50 ஆண்டு காலமாக செயல்பட்ட சூத்திரதாரி. கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், கண்ணியம் குறையாத கர்மயோகி. மன்மோகனிடம் நாம் விரும்பியதும், வேண்டாததும் ஒரு பார்வை; எளிய குடும்ப பின்னணியைக் கொண்டிருந்தாலும், வழிகாட்டவும், வளர்த்தெடுக்கவும் தந்தை இல்லாத சூழலிலும் உலகின் ஆகச் சிறந்த பல்கலைக் கழகங்கள் எனக் கருதப்படும் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் ஆகியவற்றில் படித்தவர். ஆக்ஸ்போர்டில் உயர்கல்வி முடித்தவுடன் உடனே ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர் ...











