மு.கருப்பசாமி, அருப்புக் கோட்டை, விருதுநகர் மாவட்டம் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன? ஒரு ஆண் எத்தனை பெண்ணோடு தொடர்பு கொண்டவனாகத் தான் இருந்தாலும், தனக்கான மனைவி பத்தினியாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பான்! அதே போல கருணாநிதி எப்படிப்பட்ட ஊழல் செய்யும் தலைவர் என்பதை அருகிருந்து அணுவணுவாக உணர்ந்த போதிலும் தன்னை பொருத்தவரை ஒரு நேர்மையாளராக நிலை நிறுத்திக் கொண்டவர் சண்முகநாதன்! கருணாநிதியின் சாதனைகள் பலவற்றுக்கு அவரது மனைவி, மக்கள், சகாக்களை விட அதிக உறுதுணையாக இருந்த ஒரே நபர் ...
பாஜகவின் லட்சியங்களில் ஒன்று காங்கிரஸ் இல்லாத இந்தியா! ஒரு எதிர்கட்சியாகக் கூட காங்கிரஸ் உயிர்பித்து இருக்கக் கூடாது. அவ்வளவு ஏன் ஒரு பலவீனமான கட்சியாகக் கூட அது ஜீவித்திருக்கக் கூடாது என்பது தான் பாஜகவின் இலக்கு! இதை பல மேடைகளில் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சொல்லி இருக்கிறார்கள்! அதே சமயம் அந்த அழித்தொழிப்பை அவர்கள் ஜனநாயக வழியில் செய்வதற்கு செய்வதை விடவும், ஆள்தூக்கி அரசியல் வழியாக – பேர அரசியல் வழியாகத் – தான் பல்வேறு மாநிலங்களிலும் நடைமுறைப் படுத்தினார்கள். நமக்கு மிக ...
தெருவில் இறங்கி போராடும் களப் போராளி! அஞ்சாமையின் இலக்கணம்! மதவாத சக்திகளின் மாபெரும் விரோதி என்பதெல்லாம் சரி தான்! அதற்காக மம்தாவை அகில இந்திய தலைவராக – அடுத்த பிரதமராக – ஏற்க முடியுமா..? நாட்டிற்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கே பேராபத்தாக பார்க்கப்படும் பாஜகவோடு மோதி வெல்லும் ஆற்றல் உள்ள இந்தியாவின் ஆகச் சிறந்த போராளி மம்தா பானர்ஜி என்பதில் நமக்கு மாற்று கருத்தே இருக்க முடியாது. ஆட்சியில் உள்ள எதிர்கட்சி முதல்வர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் பாஜகவிற்கு பணிந்து போகின்ற நிலையில், ...