“மருதோன்றி” எனும்  மருதாணி ! திபாவளிக்கு வண்ணமய  வாழ்த்து ! மருதாணி சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. மருதாணி இலை நம்மை அழகுபடுத்திக் கொள்ள மட்டுமல்ல, இது ஆரோக்கியம் சார்ந்த இயற்கையான நிறமூட்டியாகும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, மனிதனுக்குப் பலனளிக்கும் மருதாணிக்கும், தீபாவளிக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது; மருதாணி இலையின்  சாறினால் சிவந்த நிறத்தில் மரு எனும் மச்சம் போன்ற சிறு புள்ளி,  தோன்றுவதால் அந்த இலைக்கு “மருதோன்றி” என்று பெயர் வைத்தனர். அதுவே பிற்காலங்களில் மருவி மருதாணி என்றாயிற்று. சித்த மருத்துவத்தில், ...