வேறெப்போதையும் விட தற்போது மருத்துவர்களின் தேவையும், முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது.  இன்றைக்கு மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் தழைத்தோங்கின்றன! அரசு மருத்துவமனைகளும், மருத்துவர்களும் போதாமைகளால் திணறும் நிலை குறித்த ஒரு அலசல்; மக்கள் மருத்துவராகவும், மகத்தான மக்கள் தலைவராகவும் திகழ்ந்த மேற்கு வங்கத்தின் மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் நினைவாக ‘தேசிய மருத்துவர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைக்கு தமிழகத்தை பொறுத்த அளவில் அரசு மருத்துவர்கள் நிலை என்பது கொண்டாட்டத்திற்கு ஆனதாக இல்லாமல், திண்டாட்டத்திற்கானதாக உள்ளது என்பதே நிதர்சனம்! வியாதிகள் ...