இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிபால் பல்கலைக் கழகம் சித்த மருத்துவ பாட திட்டத்தை அங்கீகரித்துள்ளதை போல, அமெரிக்காவிலும் ஒரு புகழ் பெற்ற மருத்துவ கல்லூரி அங்கீகரித்து நடைமுறைக்கும் வந்துள்ளது என்றால், தமிழரின் மருத்துவம் தரணியெல்லாம் பரவுகிறது தானே! ஒரு முக்கியமான முன்னெடுப்பு சத்தம் இல்லாமல் தொடங்கி உள்ளது. நவீன ஆங்கில மருத்துவம் வேறு எந்த மாற்று மருத்துவமும் தேவையில்லை என்ற நிலைப்பாடு உடையதாகும். நாட்டு மருந்து உட்கொண்டதாக அறிந்தாலே போதும் ஆங்கில மருத்துவர்கள் நோயாளிகளை திட்டி தீர்த்துவிடுவார்கள்! இப்படிப்பட்ட இந்த அலோபதி டாக்டர்களை ...