ஒன்றா, இரண்டா எத்தனையோ மருத்துவ பலன்கள் வெற்றிலையில் உள்ளன! இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல, பித்தம்,கபம் தொடங்கி ஆண்மை வீரியம் வரை எக்கச்சக்க நோய்களுக்கு தீர்வு தரும்! மங்கள நிகழ்ச்சிகளில் இதுவே  மணி மகுடம்! மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகளுள் ஒன்று வெற்றிலை. மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் இந்த வெற்றிலையைச் சாப்பிடச் சொன்னாலே பலர் முகம் சுளிக்கிறார்கள். புகையிலை சேர்த்துப் போட்டு வெற்றிலையின் மீதான பெயரை கெடுத்து விட்டது இந்தச் சமூகம். அதனாலேயே நம்மில் பலர் வெற்றிலையா? என்று தலைதெறிக்க ...