அத்லடிக்கில் நூற்றுக்கணக்கான மெடல்களை அள்ளிக் குவித்தவரும், கோல்டு மெடல் வென்ற சாதனையாளருமான தமிழ் பெண் ஜெயந்தி, பாஜக எம்.பியான பி.டி. உஷாவின் கேரள விளையாட்டுப் பள்ளியில்  மர்ம மரணம் அடைந்துள்ளார்! கோவையைச் சேர்ந்த இந்த இளம் பெண்ணின் உயிரை பறித்தது யார்? கேரளத்தில் பி.டி.உஷா நடத்தும் கோழிக்கோடு விளையாட்டு பயிற்சிப் பள்ளியில் 27 வயது இளம் ஆசிரியை இரவில் தூங்கப் போய் அதிகாலையில் பிணமாய் தொங்கிய சம்பவம் நடந்துள்ளது. ஆசிரியை தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும், பள்ளியின் உரிமையாளர் பாஜக எம்பி, உலகப்புகழ் பெற்ற ஒலிம்பிக் ...

கள்ளக் குறிச்சி மாணவியின் மரணத்தை அரசு நிர்வாகம் கையாண்ட விதம் தான் அந்தப் பகுதியை இன்று கலவர பூமியாக மாற்றியுள்ளது. செல்வாக்கான நிர்வாகத்திற்கு சார்பாக அரசு நிர்வாகம் இருக்கிறது என்ற தோற்றம் நாளுக்கு நாள் வலுத்த நிலையில் நான்காவது நாள் அது தீவிரம் பெற்று வன்முறை வடிவம் கண்டுவிட்டது. அந்தப் பள்ளியை நடத்துபவர் பாஜகவில் செல்வாக்கு மிக்கவர் என்று சொல்லப்படுகிறது. அதனால், தமிழக அரசுக்கு ஏதேனும் அரசியல் அழுத்தம் தரப்பட்டு இருக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால், பொதுவாகவே இது போன்ற பிரச்சினைகளில் சக்தி வாய்ந்த ...