இந்த ஆட்டம் படத்தின் கதைக் களனோடு மலையாள திரைத்துறை ஆண்களின்  பாலியல் ஆட்டம் அம்பலப்பட்ட நிகழ்வுகள் தான் எவ்வளவு பொருந்தி போகின்றன…!பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை இந்த ஆணாதிக்க சமுதாயம் அணுகும் மனநிலையை எந்த படமும் இவ்வளவு துல்லியமாக படம் பிடித்ததில்லை..! சமீபத்தில் நடைபெற்ற  70-வது தேசிய திரைப்பட விழாவில், ‘ஆட்டம்’ திரைப் படம் 2024 ம் ஆண்டின் மூன்று மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது. அதாவது, சிறந்த திரைப் படம், சிறந்த திரைக் கதை, சிறந்த எடிட்டிங் ஆகிய விருதுகள் இந்தப் படத்திற்கு ...