கேரளத் திரைத் துறையில் பூகம்பத்தை ஏற்படுத்தி பிரபல நடிகர்கள், இயக்குனர்களை கதிகலங்க வைத்திருக்கும் பாலியல் அத்துமீறல்கள் எப்படி வெளிப்பட்டன? இத்தனை வித அத்துமீறல்கள் இன்னின்னாரால் நிகழ்த்தப்பட்டுள்ளன எனக் கூறிய ஹேமா கமிட்டி அறிக்கை சொல்வது என்ன? இதில் ஏன் பல பிரபலங்களின் பெயர்கள் நீக்கப்பட்டன? 2017 -ம் ஆண்டு பிப்ரவரி 17ல் பிரபல கேரள நடிகை ஒருவர் சிலரால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார். பிரபல நடிகர்களை நிர்வாகிகளாக கொண்டிருந்த ‘அம்மா(Association of Malayalam Movie Artists)  அப் பிரச்சனையில் சம்பந்தப்பட்டிருந்த முன்னணி நடிகர் ...