இயற்கை தருகிறது பாடம்! அதை கற்க மறந்ததால் தேடுகிறோம் ஓடம்! வரமான மழையை ஏன் சாபமாக்கி கொள்ள வேண்டும். நாம் கற்க தவறியமை என்ன? கற்க வேண்டியவை என்ன? பெற்ற வலிகள் என்னென்ன..? வரப் போகும் காலங்களை எதிர்கொள்ள என்ன திட்டம்..? ஒரு அலசல்; பருவமழை மீண்டும் அதன் கோர உருவப் படத்தை தமிழ் நாட்டில் வரைந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில், தீவிர மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையால், வட தமிழ்நாட்டின் ...
மழை கொட்டோ, கொட்டென்று கொட்டுகிறது. பாலாறு, காவிரி தொடங்கி தாமிரபரணி வரை ஆற்றோரக் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்குகின்றன! இந்த நிலைமைக்கு என்ன காரணம்? இது இயற்கையின் குற்றமா? மனிதர்களின் குற்றமா? மழை நீரை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது? மூத்த பொறியாளர் அ .வீரப்பன் பேட்டி. தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்க தலைவராக உள்ள முனைவர் அ.வீரப்பன் நீர் மேலாண்மையில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர். தமிழ்நாட்டின் நீர், நில வளங்கள் குறித்த புள்ளி விபரங்களையும் ,கள நிலவரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் மூத்த பொறியாளர் ...