மலச்சிக்கல்… பல்வேறு நோய்கள் வருவதற்கு காரணமாவதை போல, அடிக்கடி சிலருக்கு வயிற்றைக் கலக்கி மலம் கழிக்கும் பிரச்சினை உள்ளது. செரிமானக் கோளாறு மற்றும் குடல் இயக்கத்தில் ஏற்படும் பிரச்சினையாக இருக்கலாம். இதை இயற்கையான வழிமுறைகளில் எளிதில் சீராக்கலாம்! அடிக்கடி மலம் போவது சில நீண்டகால மற்றும் தீவிர நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் என்பதால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாந்தியுடன் கூடிய பேதி, வெறும் நீராக வயிற்றுப்போக்கு ஏற்படுவது, ரத்தமும் சீழுமாக மலம் வெளியேறுவது போன்றவை நிகழ்ந்தால் அதுவிஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க ...