ஸ்ரீ வைகுண்டத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவனை சகித்துக் கொள்ள முடியாமல் அரிவாளால் வெட்டி சிதைத்துள்ளனர், சாதி ஆதிக்க சக்திகள்! நாங்குநேரி சம்பவத்திற்கு பிறகு நடக்கும் கணக்கற்ற சாதிவெறி சம்பவங்களில் இதுவும் ஒன்று..! கவனம் பெற முடியாத பல நூறு சாதி அநீதிகளுக்கு என்ன தான் தீர்வு..? தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ப்ளஸ்-1 மாணவன் பள்ளிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த நிலையில், மூன்று பேர் பைக்கில் பின் தொடர்ந்து வந்து பேருந்தை வழி மறித்து நிறுத்தி, அதிரடியாக பேருந்தில் ...