காவல்துறையின் காட்டு தர்பார், தவெக ஆட்சியிலும் தடங்கலின்றி தொடர்கிறது. தமிழக முதல்வரின் அதிகாரத்திற்குட்பட்ட காவல் துறையை மத்திய உள்துறை அமைச்சகம் கட்டுப்படுத்துகிறதா? மத்திய பாஜக அரசின் வழிகாட்டுதலில் மாணவர்கள் போராட்டங்கள் காவல்துறையால் ஒடுக்கப்படுகிறதா? உண்மை நிலை குறித்த ஒரு ஊடுருவல் பார்வை; நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிராக போராடும் மாணவர்களை ஏதோ சமூக விரோதிகளைப் போல தமிழக காவல்துறை கையாள்கிறது. தங்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக போராடுவது என்பது ஜனநாயக நாட்டில் மக்களின் அடிப்படை உரிமையாகும். அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள உரிமையாகும். போராடும் மாணவர்களை ...
















