பள்ளிக் கல்வித் துறை படு வேகமாக வீழ்ந்து கொண்டுள்ளது பாதாளத்தில்! அடிதடி, ரகளை, ரத்தக் களரி, போதை வஸ்து பழக்கங்கள், சாதிய மோதல்கள், பாலியல் அத்துமீறல்கள்…எனக் கல்விக் கூடங்கள் கலவரக் கூடங்களாக மாறி வருகின்றன. என்ன காரணம்? யார் பொறுப்பு? செய்ய வேண்டியவை என்ன..? இரு மாணவர்களிடையே ஏற்பட்ட ஒரு சாதாரண வாய்த் தகறாறு முற்றி மோதலாகி, பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஆகாஷ் சமீபத்தில் (23/08/2024) உயிரிழந்த செய்தி நம்மையெல்லாம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இடம், நாமக்கல் மாவட்டம் வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளி! பள்ளிக் கூடங்கள் ...