கலைக் கோயிலாகவும், இந்தியாவின் கலைப் பொக்கிஷமாகவும் அடையாளம் காட்டப்பட்ட இடம் தான் கலாஷேத்திரா! நடந்துள்ள நிகழ்வுகளை எல்லாம் அவதானித்து, இந்த இளம் பெண்கள் இதயக் குமுறல்களை எல்லாம் கேட்கும் போது, கலையைக் கற்பதற்கு கற்பை இழக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியானதா..? கலாஷேத்திராவைப் பற்றி கட்டமைக்கப்பட்ட புனித பிம்பங்கள் அனைத்தும் கலைந்து நொறுங்கியுள்ளது…! பூக்களெல்லாம் சேர்ந்து புயலாக உருவானது போல, இந்த இளம் பெண்கள் கொந்தளித்து பொதுவெளிக்கு வந்து குமுறுகிறார்கள் என்றால், எத்தனை அழுத்தங்கள் ஏற்ப்பட்டிருக்கும்? எவ்வளவு வலியை பெற்று இருப்பார்கள்? அடங்கி கிடப்பதும், ...