மாதிரிப்  பள்ளிகள் என்பதாக மோடியின் (பிரதமர் ஸ்ரீ பள்ளிகள்) கல்வித் திட்டத்தை தமிழக அரசு செயற்படுத்துகிறது! தேசிய கல்விக் கொள்கையின் அம்சமாக அரசுப் பள்ளி மாணவர்களை பிரித்தாளும் சூழ்ச்சியே இது! அரசு பள்ளி மாணவர்களிடையே பாரதூரமான ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துகிறார்கள்..! மாதிரி பள்ளிகள் திட்டத்தை கடந்த ஆண்டு 2022 செப்டம்பர் மாதம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஊடக செய்தியாக வெளியிட்டார். இந்தியாவில் தற்போது மாதிரி பள்ளிகள் என்பதாக 6,000 பள்ளிகள்  ‘பிஎம் ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா’ (PMSHRI) திட்டத்தின் கீழ் ...