பெரும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை – 2025 அதிர்ச்சியளிக்கிறது. இத்தனை சொதப்பல்களா? இருக்கக் கூடாத அம்சங்கள் இத்தனையா? இது எப்படியெல்லாம் தேசிய கல்விக் கொள்கைக்கு பல விதங்களிலும் ஒத்திசைவாக உள்ளது என்பதை விவரிக்கிறார் கல்வியாளர் ஜவகர் நேசன்; தமிழ்நாடு மாநிலக் கல்வி கொள்கை பள்ளிக் கல்வியை மட்டும் கணக்கில் கொண்டதாக வெளியாகியிருக்கிறது. அதுவும் முழுமையானதாக இல்லை. பகுதி பகுதியாக இருக்கிறது. உள்ளடக்கத்திலும், கட்டமைப்பிலும் மிகக் குறைந்த தரத்தோடு ஒரு கொள்கை அறிக்கை வெளியாவது, இதுவே முதன் முறை. பொதுக் கொள்கைக்குரிய ...
என்ன தான் நடந்திருக்கிறது கல்விக் கொள்கை உருவாக்கத்தில்? பாம்பும் சாகக் கூடாது, தடியும் உடையக் கூடாது என்ற வகையில் ஒரு சாகஸ நாடகம் அரங்கேறியுள்ளது. வெளியிடப்பட்டு இருப்பது சில அறிவிப்புகளாக உள்ளனவே ஒழிய, எங்கே இதில் கல்வி கொள்கை உள்ளது? எனக் கேட்கின்றனர் கல்வியாளர்கள்; தமிழ்நாட்டிற்கு என மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் தடபுடலாக வெளியிட்டுள்ளார். ஆனால், அதில் கல்வி குறித்த கோட்பாடோ, கொள்கையோ,தெளிவான பார்வையோ எதுவுமின்றி, வெறுமே தற்போதைய ஆட்சி செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த சுய தம்பட்டமே வெளிப்பட்டுள்ளது. ...












