‘பாஜக ஆட்சியல்லாத மாநில அரசுகளை வஞ்சிக்காதீர்கள்…’ என தென் இந்திய மாநிலங்கள் ஓங்கி குரல் கொடுக்கின்றன! மத்திய அரசின் கீழ் மாநில அரசுகளை உரிமைகளில்லா பதுமைகளாக்கும் நோக்கமா? பாஜகவின் நகர்வுகள் எதிர்கால இந்தியாவை சிதறடிக்கவா? சின்னாபின்னப்படுத்தவா? மாநில அரசுகளின் நிதி நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறதை உச்ச நீதிமன்றமும், நாடாளுமன்ற வளாகமும் கண்மூடாமல் கவனித்துக் கொண்டுள்ளன என்றே கூற வேண்டும். கர்நாடக மாநில முதல்வர் சித்தாராமையாவும்,ஒட்டு மொத்த மாநில தலைவர்களும்  அமைச்சர்களும், ஒன்றிய அரசை எதிர்த்து, அதன் ஓர வஞ்சனையை எதிர்த்து, மாநிலத்திற்கு ...