தேசிய கல்வி கொள்கைக்கு மாற்றாக தமிழ் மண்ணுக்கான கல்வி கொள்கையை வகுப்போம் என்றவர்கள் அறிக்கையை வெளியிடாமல் பம்முவது ஏன்? குழுவில் உள்ள கல்வியாளர்களுக்கே காட்டப்படாத இறுதி அறிக்கை! பொதுவெளியில் வைக்க தயக்கம் ஏன்? நீதிபதி ஊடகங்களிடம் பேசப் பயந்து ஓடியது ஏன்? இன்றைக்கு தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து மாநில கல்வி கொள்கைக்கான அறிக்கையை கல்வியாளர்கள் குழு தந்தது! வழக்கமாக இது போன்ற அறிக்கையின் முழு வடிவமோ அல்லது முப்பது பக்கங்கள் கொண்ட சாராம்சமோ ஊடகங்களுக்கு தரப்படும். இவை தரப்படவில்லை. குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து ...