சென்னை, சூளைமேட்டில் வசித்து வருபவர் ஐஸ்குச்சிக் கலைஞர் சந்திரன். மாற்றுத்திறனாளியான இவர்  ஐஸ்குச்சிகளை மட்டுமே பயன்படுத்தி 300க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்களைச் செய்து தன் வீட்டில் காட்சிப்படுத்தி வைத்துள்ளார். விமானம், ஊஞ்சல் ஆடும் மீன்கள், மோட்டார் சைக்கிள், படுக்கை அறை விளக்கு அலங்காரம் போன்றவற்றை தனக்கே உரித்தான பாணியில் தத்துரூபமாக அழகுற வடிவமைத்து உள்ளார். தான் நினைப்பதை அப்படியே ஐஸ் குச்சிகளால் காட்சிப் படுத்தும் ஆற்றல் கொண்டவர் இவர். போலியோ நோயால் இரு கால்களை இழந்து சக்கர நாற்காலியில் வலம் வந்த போதிலும் மனம் ...