மாலத்தீவு பெரும் பேசுபடு பொருளாகி உள்ளது. பிரதமர் மோடியை விமர்சித்த மாலத்தீவின் மூன்று அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளது நியாயமே. அதே சமயம் இந்தியாவிற்கு எதிரான கொந்தளிப்பு மன நிலை மாலத் தீவில் ஏன் ஏற்பட்டது? அதன் பின்னணி என்ன என்பதை பார்க்க வேண்டும் – நீதிபதி ஹரிபரந்தாமன் கட்டுரை; மாலத் தீவுக்கு அருகில் இந்தியாவின் லட்சத்தீவு இருக்கிறது .லட்சத் தீவுக்கு சென்ற பிரதமர் மோடி, லட்சத் தீவின் அழகை பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவுகளில், “லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அங்கு ...