போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் மினி பஸ்!  நூறு குடும்பங்களுக்கு மேல்  வசிக்கும் பகுதிக்கு  மினி பஸ் சேவை..! எல்லாம் மகிழ்ச்சி! ஆனால், இதில் தனியாருக்கு மினி பஸ் அனுமதி தந்து, பொதுத் துறையை முற்றிலும் புறக்கணிப்பது சரியா? தனியார் மினி பஸ்களில் மக்கள் சந்திக்கும் இடர்பாடுகள் அரசுக்கு தெரியாதா…? தற்போது 2,950 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப் பஸ்களின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய விரிவான மினி சிற்றுந்து திட்ட வரைவறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ் நாட்டரசின் அரசிதழில் கூறப்பட்டிருப்பதாவது: ...