சாதாரண மக்களுக்கு மின்சாரக் கட்டணங்களை பார்க்கும் போது ஷாக் அடிக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகளும், தெருக்கோவில் திருவிழாக்களை நடத்துவோர்களும் இஷ்டத்திற்கு மின்சாரத்தை கொக்கி போட்டு தூக்குகின்றனர்..! இன்னும் என்னென்னவோ விதங்களில் எல்லாம் மின் திருட்டு நடக்கின்றன..! இதனால் மின் வாரியம் பெரும் நிதி இழப்பை சந்திக்கிறது. இவை ஒழுங்குபடுத்தப்படுமா? மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு அப்பாற்பட்டு மின்சாரத்தை தவறாகப் பயன்படுத்தும் அனைத்து முறைகளும் மின் திருட்டாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது. மின் திருட்டு வகையறாக்கள்; # டிரான்ஸ்பார்மர், தெருவோர மின் இணைப்புப் பெட்டி, மின் கம்பம் ...
















