சென்னை  காசிமேடு மீன்பிடித்துறைமுகத்திலிருந்து ஜூலை 23 அன்று (IND-TN-02-MM-2029)  விசைப் படகில் ராயபுரத்தை சேர்ந்த படகு ஓட்டுநர் ரகு, திருச்சினாங்குப்பத்தை சேர்ந்த லெட்சுமணன், சிவகுமார், பாபு, பார்த்தி ஆகியோரும் திருவெற்றியூர் குப்பத்தை சேர்ந்த கண்ணன், தேசப்பன், முருகன், ரகு ஆகியோரும் லெட்சுமிபுரத்தை சேர்ந்த தேசப்பன் உள்ளிட்ட 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். ஆகஸ்ட் 7 ந்தேதி கரைதிரும்பியிருக்க வேண்டியவர்கள் இன்று வரை திரும்பவில்லை. அவர்கள் 10 நாட்களுக்கான உணவை மட்டுமே கொண்டு சென்றனர்.அவர்களை ஜூலை 28 முதல் தொடர்புகொள்ள முடியவில்லை. சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தை ...