தமிழகத்தின் சில மீனவ கிராமங்களில் நிலவும் நாட்டாமைத்தனங்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு மீன் பிடிக்க  உள்ள தடைகள் , இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள், இலங்கை சிறையில் வாடும் 120  மீனவர்கள் குறித்தெல்லாம் மீனவ தொழிலாளர் சங்கத்தின் சின்னதம்பி அதிர்ச்சி தகவல்களை நேர்காணலில் பதிவு செய்கிறார். அதிராம்பட்டினத்தைச் சார்ந்த நான்கு குடும்பங்களை ஊர் ஊர்விலக்கம் செய்துள்ளார்கள்! என்ன நடந்தது? தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காந்திநகர் என்ற மீனவக் கிராமம் உள்ளது. இங்கே சேகர் என்பவரின் மகன், வெளியூரில் இருந்து வந்த நண்பர்களை தனது படகில் ஏற்றி சுற்றிக் காண்பித்து  ...