மத்திய பிரதேசத்தில் ஜூன் 18ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஓரிடம் உறுதி என்ற நிலையில் காங்கிரசின் மீனாட்சி நடராஜன் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து, அவரை போட்டியில் இருந்தே விலக்கியதன் பின்னணியில் ஒரு மிகப் பெரிய சதி அரங்கேற்றியுள்ளது; தமிழரான மீனாட்சி நடராஜன் பிறந்து வளர்ந்து கல்வி பயின்றெதெல்லாம் மத்திய பிரதேச மாநிலத்தில் தான்! முதுகலை பட்டம் பெற்ற அவர் மாணவப் பருவத்திலேயே – தேவி அகல்யா பல்கலைகழகத்தில் படித்த பொழுதே- காங்கிரசின் மாணவரணியில் இணைந்து பணியாற்றி தனது அரசியல் வாழ்வை ...
















