முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் இன்று பேசிய பேச்சு பெரிய வீச்சை பெற்றுள்ளது. திமுகவை எதிர்ப்போர் இதை கொண்டாடலாம். ஆனால், ஆட்சியில் உள்ளவர் இப்படி ஆவேசமாக உரக்கப் பேசுவது ஒரு வகையில் இயலாமையே..! திமுகவின் வலையில் விஜய் வீழ்ந்துவிட்டார்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் கோட்டை விடுகிறார், விஜய்; அதிகாரத்தை இழந்த திமுகவினர் இயலாமையால்  கோபம் மேலிடப் பேசி வருகிறார்கள் என்றால், சகல அதிகாரங்களுடன் பதவியில் வீற்றிருக்கும் முதலமைச்சர்  பதிலுக்கு கோபப்பட வேண்டியதில்லை.இன்று முதலமைச்சர் விஜய் கடந்த பல நாட்களாக திமுகவினர் வெளிப்படுத்தி வந்த வன்ம பேச்சுகளுக்கும், ...