பதவி ஏற்புக்கு பிறகு தன் மெளனத்தை கலைத்து இன்று பொது வெளியில் பேசியுள்ளார் முதல்வர் விஜய். தன் நெடிய மெளனத்தால் புதிரானவராக பார்க்கப்பட்ட விஜய் இன்று மனம் திறந்தார். அவரது அரசியல் அணுகுறைகள் நுட்பமானதாகவும், அரசியல் தந்திரோபயங்களைக் கொண்டதாகவும் வெளிப்பட்டது; விஜய்யின் திருச்சி விசிட்டில் தவெகவின் அரசியல் குறித்த என்னுடைய சில அப்சர்வேஷன்களை இங்கு நான் பகிர்ந்து கொள்கிறேன். அடேங்கப்பா ஏன் இந்த பில்டப்? ஊடகங்கள் விஜய் சென்னை புறப்பாடு தொடங்கி நேரலை செய்தது ரொம்ப ஓவர். இது தேவையற்றது. திருச்சிக்கு விஜய் வந்தது ...