மாணவர்கள், இளைஞர்களின் நலன்களுக்காக 18 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வாங்சுக்கின் உடல் நிலை அனைவரையும் உலுக்க வைத்துள்ளது. அகிம்சை மொழியை அறவே புரிந்து கொள்வதில்லை, நம் அதிகார மையங்கள்! சோனம் வாங்சுக்கின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் நண்பன் படத்தில் நடித்த தற்போதைய தமிழக முதல்வர் வாய் திறப்பாரா? நீட் தேர்வு தொடங்கி சி.பி.எஸ்.இ தேர்வு வரை மோசடிகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருப்பதால் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. குறுக்கு வழியில் பணம் படைத்தவர்கள் பாஸ் ஆவதற்கு ஆட்சியாளர்களே ஒத்துழைப்பது கொடுமையிலும் கொடுமை! இதற்கு ...
















