தமிழ்க் கடவுள் என நாமெல்லாம் பெருமைப்படும் முருகனுக்கு மாநாடு. இதில் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சி இயல்பாக ஏற்பட்டது. ஆனால், நடந்தவையும், நடக்கப் போகிறவையும் முருகனை தொடக்கமாக வைத்து விநாயகர், ராமர், கிருஷ்ணர்… என்று பற்றிப் படர்ந்து மொத்த தமிழ் சமூகத்தையும் வேறு திசைக்கு அழைத்துச் செல்கிறதோ..? ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ என்ற தலைப்பிலேயே சனாதனம் பளிச்செனத் தெரிகிறது. அதென்ன அனைத்து உலகம்? இருப்பது ஒரு உலகம் தானே. ஈரேழு உலகங்களை கற்பிக்கும் புராணங்களின் புனைவுப்  பார்வையிலேயே தலைப்பும் உள்ளது. ‘பன்னாட்டு முருகன் மாநாடு’ ...

பாஜகவிற்கு போட்டியாக திராவிட மாடல் ஆட்சி முத்தமிழ் முருகன் மாநாட்டை அரசாங்க செலவில் பிரம்மாண்டமாக நடத்துகிறது. ”இந்துத்துவ அரசியலா பேசுகிறாய்..?  நீ மட்டும் தான் வேல் யாத்திரை நடத்துவாயோ..? இதோ நான் உன்னையே மிஞ்சுகிறேன் பார்..” என மு.க.ஸ்டாலின் முருகனின்  வேலை தூக்கி உள்ளதன் பின்னணி என்ன? தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், இதை நடத்துகிறாராம் முதல்வர் ஸ்டாலின். திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல், தமிழக அரசின் இந்து அற நிலையத் ...