பிரம்மாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு மதுரையில்  நடந்துள்ளது.கோடிக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பக்தி பரவசத்துடன் முருகனின் திருவிழாக்களில் பங்கு பெற்று வருகிறார்கள். இந்த திருவிழாக்களுக்கும், மதுரையில் இந்து முன்னணி நடத்திய விழாவிற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு தெட்டென வெளிப்பட்டது; தமிழ் மக்களிடம் ஏகோபித்த செல்வாக்குள்ள முருகனுக்கு ஆண்டு முழுக்க தைபூசம், விசாகம், சூரசம்ஹாரம், கந்த சஷ்டி திருவிழா, பங்குனி உத்திர விழா என பல விழாக்கள் தமிழகம் முழுக்க நடந்த வண்ணம் உள்ளன. கோவில் விழாக்களில் பங்குபெறும் உண்மையான பக்தர்கள் யாருமே,  ”முருக கடவுளுக்கு ...