முருங்கை பலரது வீட்டிலும் இருக்கும் மரம். தெரிந்த இந்த மரத்தை குறித்த தெரியாத  சேதி பலவும்  இருக்கின்றன. ”கீரையின் அரசனான இந்த முருங்கைக் கீரையை வாரத்தில் மூன்று முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால் நோய்களே அண்டாது, முதுமையை தடுக்கும்” என்று மருத்துவர்கள் கூறுவதை சற்று விரிவாக பார்ப்போம்; முருங்கைக்கும், முருகனுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் , முருகன் என்றாலே இளமை, வீரம், அழகு  தான்! இவை அத்தனையுமே முழுக்க முருங்கை தரும் . கியூபாவின் காஸ்ட்ரோவின் கெரில்லா படைத் தளபதி சே குவேரா, ...