மா.சுப்பிரமணியம் நல்லவர். ஆனால், அவர் கட்டுப்பாட்டில் தான் சுகாதாரத் துறை உள்ளதா..? என சந்தேகப்படும் அளவுக்கு ஊழல் முறைகேடுகள் தலைவிரித்தாடுகிறது! வரலாறு காணாத மன உளைச்சலை சந்தித்துள்ள அரசு மருத்துவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் அறிவித்து உள்ளனர். ஏழை, எளிய மக்களுக்கு உடம்பு சரியில்லை என்றால், அவர்களுக்கான ஒரே புகலிடம் அரசு மருத்துவமனை தான்! ஆனால். அங்குள்ள அதிகாரிகளுக்கோ இது பணம் பார்க்கும் அமுத சுரபி!எதற்கெடுத்தாலும் காசு,பணம், துட்டு என மருத்துவத் துறை அதிகாரிகள் சுகாதாரத் துறையை சூறையாடி வருகிறார்கள்!  இதை நினைத்தால் வேதனையாக உள்ளது. ...