மு.க.முத்து தான் முதலில் கலைஞரின் அரசியல் வாரிசாக அறியப்பட்டார். திமுக மேடைகளில் கட்சியின் கொள்கை விளக்க பாடல்களை 1970 களில் பட்டிதொட்டியெங்கும் பாடியுள்ளார். எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் களம் இறக்கப்பட்டார். ஆனால், பொல்லா குடிப் பழக்கம் அவர் வாழ்க்கை பாதையின் திசையை மாற்றி பெரும் வீழ்ச்சியைக் கண்டார்; 2006-ஆம் ஆண்டுவாக்கில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து, ‘மது போதைக்கு அடிமையாகி, குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, திருவாரூரில் சுய நினைவின்றி, அடிக்கடி அலங்கோலமான நிலையில், சாலையில் விழுந்து கிடப்பதாக’ வார இதழ் ஒன்றில்  ஒரு ...