எப்படியான தகுதிகள் உள்ளவர்களுக்கு மேயர் வாய்ப்புகள் வழங்கப்பட்டன என்பதற்கு கோவை, நெல்லை மேயர்களே அத்தாட்சியாகும். வலுவான தலைவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் வந்துவிடக் கூடாது என நினைக்கும் ஆட்சியாளர்கள், தாங்கள் மேய்க்கத் தோதானவர்களை மேயராக தேர்ந்தெடுத்து ஆட்டுவிக்கிறார்கள்; ஒரு மாநகரத்தையே வழி நடத்திச் செல்லும் மகத்தான தலைமை பொறுப்புக்கே மேயர் என்ற அடைமொழி வழங்கப்படுகிறது. மேயர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் போது தகுதி, திறமை, நேர்மை, தலைமைப் பண்பு மக்கள் சேவையில் ஆர்வம் ஆகியவை அளவுகோளாக கருதப்படாமல் கட்சித் தலைமைக்கான விசுவாசம் மட்டுமே அளவுகோளாக பார்க்கப்படுகிறது ...