கந்து வட்டிக் கொடுமைகளுக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் பெற்றவையாக சில மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை செய்யும் அடாவடித் தனங்களால் அவமானம் தாங்காமல் தற்கொலைக்கு ஆளாகும் விவசாயிகளும், பெண்களும் அனுபவிக்கும் துன்பங்கள் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. அடமானமில்லாமலும், அத்தாட்சி சொத்து பத்திரங்கள் ஏதும் இல்லாமலும் கேட்டவுனே கடன் தருபவையே மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களாகும். ஏழை, எளிய அடித்தட்டு மக்களை குறி வைத்து மட்டுமே இவர்கள் கடன் தருகிறார்கள். இந்த நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களை தேடி பிடித்து கடன் கொடுத்து கந்துவட்டி வசூலிப்பதில் ...