கடந்த பத்து ஆண்டுகால பாஜக ஆட்சியில்  அரசுடமையக்கப்பட்ட வங்கிகள், ரூபாய் 16.11 இலட்சம் கோடிகளைத் தள்ளுபடி செய்துள்ளன. மனசுக்கு பிடித்த தொழில் அதிபர்களுக்கு மக்கள் பணத்தை வாரித் தந்ததோடு, அந்த கடன்களை தள்ளுபடியும் செய்துள்ளது பாஜக அரசு! இது எப்படி நடந்தது..? பத்தாண்டுகளுக்கு முன் நடந்த காங்கிரஸ் அரசு ‘சகிக்க முடியாத ஊழல்கள்’ நிறைந்தது எனக் குற்றம் சாட்டப்பட்டது. அந்த அரசு தள்ளுபடி செய்த தொகை  ரூபாய்இரண்டு இலட்சம் கோடி மட்டுமே,  இந்த ஆளும் அரசு செய்திருக்கும் தள்ளுபடியில் அது வெறும் எட்டில் ஒரு   பங்கு மட்டுமே. இம்முறை இத்தள்ளுபடிகளால் பயனடைந்தவர்கள் எளிய விவசாயிகள் அல்லர்; கொழுத்த பண முதலைகள். மேலும் இவர்கள் மோடிக்கு மிக நெருக்கமானவர்கள். வங்கி கடன் தள்ளுபடி என்பது உலக நாடுகளில் தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே செய்யப்படும். அந்த வகையில் தென்கொரியா, ஸ்கேண்டிநேவியன் ...