பொய் சொல்வதையே வழக்கமாகவும்,தொழிலாகவும் கொண்டவரை கோயபல்ஸ் என்பர். ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் பிரச்சார அமைச்சர் தான் கோயபல்ஸ். இன்றைக்கு கோயபல்ஸை உயிர்பித்து, தனக்குள் ஊடுருவச் செய்துள்ளார் மோடி! ஆனால், எளிதில் அம்பலப்படுகிற பொய்யை பேச வைப்பது யார்..? கோயபல்ஸ் பொய்களை உண்மை போல் பேசுவார். மிகுந்த பேச்சாற்றல் மிக்கவர். “ஒரு பொய்யை மீண்டும், மீண்டும் சொன்னால் அது உண்மையாகிவிடும்” என்பது கோயபல்சின் கோட்பாடு. பல லட்சம் யூதர்களை படுகொலை செய்வதற்கு முன், கோயபல்ஸ் மூலம் ஹிட்லர் யூதர்களைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்தான். ஜெர்மனியின் ...