மூன்றாவது பிரதமர் பதவி என்பது கயிற்றின் மீது நடக்கும் வித்தை போல இருக்கப் போகிறது மோடிக்கு! பல விட்டுக் கொடுப்புகள், சமாதானங்கள், அதிக பொறுமை தேவைப்படுகிறது. சர்வாதிகாரி மோடியை தேர்தல் தீர்ப்பு சமாதானவாதி ஆக்கியுள்ளது. என்னென்ன சவால்களை மோடி எதிர்கொள்ள வேண்டும்..? மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டது. முதல்கட்டமாக 72 அமைச்சர்கள் கொண்ட மோடி அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. பாஜக அமைச்சர்கள் 61 பேரும், கூட்டணிக் கட்சிகளில் இருந்து 11 பேரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதான கட்சிகளான தெலுகு தேசத்திற்கு இன்னும் இரண்டு ...